’செல்ஃபி’ திரைப்பட சக்ஸஷ் விழா

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, “எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்ட தாணு சார் அவர்களுக்கு நன்றி. மேலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ், கவுதம்மேனன் உள்பட அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் அனைவருக்கும் நன்றி’ என்றார்.

இவ்விழாவில் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, ‘செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம்.

ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார். முதல்படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார். 160 அடி பாயக்கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப்படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன். இந்தப்படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு காட்சி போட்டுக்காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது” என்றார்.