
நிவின் பாலி நடிப்பில் “மஹாவீர்யார்”
- editor tdcinema
- 5 April 2022
நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், […]
Read More
“அனந்தம்” இணைய தொடர்
- editor tdcinema
- 5 April 2022
தமிழ் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா V இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்”. இது 1964 – 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்குடன் தரும் ஒரு அழகான இணைய தொடராகும். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது, அவர் ‘அனந்தம்’ என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின், ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் கதை. இந்த தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் தயாரிக்க, அனந்தம் தொடரில் இயக்குனர் பிரியா V பல பணிகளை செய்துள்ளார். திரைக்கதை, எழுத்து மற்றும் வசனங்களுடன், எட்டு எபிசோடுகள் முழுவதும் ஒரு தடையற்ற கதையைச் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குனர் ப்ரியா V. திரைக்கதை – பிரியா V, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் & ரீமா ரவிச்சந்தர் | எழுத்தாளர் – பிரியா V | வசனங்கள் – பிரியா V & ராகவ் மிர்தாத் | ஒளிப்பதிவு – பகத் | தயாரிப்பு வடிவமைப்பாளர் – சூர்யா ராஜீவன் | இசை – A.S. ராம் | எடிட்டர் – சதீஷ் சூர்யா ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” இணைய தொடர், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது
Read More
ரவிதேஜா அடுத்து மிரட்ட போகும் திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’
- editor tdcinema
- 5 April 2022
‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், இயக்குநர் வம்சி ஆகியோரின் கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கியது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் என்னுமிடத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது. தெலுங்கு திரை உலகம் இதற்கு முன் கண்டிராத […]
Read More
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பாளரின் புதிய திரைப்படம்
- editor tdcinema
- 5 April 2022
ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அத்துடன் இப்படத்தின் பிரீ- லுக்கும் வெளியிடப்பட்டது. இதனை முன்னணி இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தின் […]
Read More
கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
- editor tdcinema
- 5 April 2022
உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “விக்ரம்”. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் […]
Read More
”ஓரின சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்கள் கடவுளின் குழந்தைகள்” – ‘காதல் காதல் தான்’ திரைப்பட நாயகி அப்ஷரா ஓபன் டாக்
- editor tdcinema
- 5 April 2022
‘காதல் காதல்தான்’ – லெஸ்பியன் க்ரைம் திரில்லர் திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களை தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘காதல் காதல்தான்’ . ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் […]
Read More