
விருது பெற்ற உலக திரைப்படங்கள் இனி அமேசான் ப்ரைம் வீடியோவில் பல மொழிகளில்
- editor tdcinema
- 30 April 2022
அமேசான் ப்ரைம் வீடியோ திறமைக்கான ஒரு இடமாக இருப்பதற்கான குறிக்கோள் கொண்டுள்ளது. இது நாடெங்கிலும் தனித்தன்மையான, சினிமா சார்ந்த குரல்கள் கொண்ட பலதரப்பட்ட படைப்பாளிகளின் ஒரு பரவலான தொகுப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறது. பொழுதுபோகக்கு மார்கெட் இடத்தை உருவாக்குவதை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக, அமேசான் அதன் வீடியோ-ஆன்-டிமாண்ட் திரைப்பட வாடகை சேவையை, ப்ரைம் வீடியோ ஸ்டோரையும் அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் இப்போது பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு) அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களையும் முன்னதாகவே பார்க்கலாம். உலகெங்கிலும் […]
Read More
நொடிந்த தயாரிப்பளருக்கு உதவிய நடிகர் சிவகுமார்
- editor tdcinema
- 28 April 2022
தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற – சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார்.சூலூர் கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் .அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். […]
Read More
உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் தமிழில்
- editor tdcinema
- 28 April 2022
உலகப்புகழ் இயக்குநர் மஜித் மஜிதி பாராட்டில் அக்கா குருவி திரைப்படம் ! மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பி வி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக தான் இப்படம் […]
Read More
என் மனதில் கீர்த்தி சுரேஷ் – இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 
- editor tdcinema
- 28 April 2022
முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி கதைக் களம் கொண்ட இந்த ஆக்சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான […]
Read More
’செல்ஃபி’ திரைப்பட சக்ஸஷ் விழா
- editor tdcinema
- 27 April 2022
கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, “எங்கள் […]
Read More
எனக்கு சம்பளம் அதிகம் – லயோலா கல்லூரி விழாவில் நடிகர் நாசர்
- editor tdcinema
- 27 April 2022
இந்த விழாவிற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி. ஏனென்றால், 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே இருந்தோம். இன்று இவ்வளவு பெரிய விழா குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் நடக்கிறது. லயோலா கல்லூரிக்கும் எனக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. பள்ளி படிப்பு முடிஞ்சதும் எல்லோருக்கும் லயோலா கல்லூரியில் சேர வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால், அதற்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமே! ஆகையால், அந்த கொடுப்பினை எனக்கில்லை. மேலும், விஸ்காம் என்கிற பட்டபடிப்பு தமிழ் நாட்டில் மூளை முடுக்கிலும் இன்று இருக்கிறது.ஆனால், அது […]
Read More
உத்வேகத்துடன் இருங்கள், பலரை ஊக்குவியுங்கள் – கல்லூரி விழாவில் நடிகர் ஜீவா
- editor tdcinema
- 27 April 2022
லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை.மேடையில் இருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே. பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்துள்ளேன். எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அப்போது எனக்கு ஒரு சிறந்த […]
Read More
இந்தியில் தயாரிப்பாளராய் களமிறங்கும் நடிகர் சூர்யா
- editor tdcinema
- 27 April 2022
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா […]
Read More
சென்னை போலிஸின் காவல் கரங்களுடன், காக்கும் கரங்களாக உதவி நடிகர் சூர்யா
- editor tdcinema
- 27 April 2022
வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். சென்னை மாநகர காவல்துறை, ‘காவல் கரங்கள்’ என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் […]
Read More