ஹோட்டலில் நடிகை போட்ட ஆட்டம்!
‘குளிர்’, ‘நானும் நீயும்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தங்கள் நண்பர்களான சங்கர், சிவசங்கர் ஆகியோருடன் தண்ணி அடித்துக் கொண்டு காரில் போயிருக்கிறார். வழியில் ஒரு ஹைவே ஹோட்டல் தென்பட, வண்டியை அங்கே நிறுத்தியிருக்கிறார். அப்போது அங்கு வந்த மும்பை மாடல் சுனாலி சஞ்சீவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார். இப்படி ஒரு காட்சி வி.வி.கிரியேசன்ஸ் தயாரித்துள்ள ‘சகாக்கள்’ என்னும் படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது. நட்பையும் காதலையும் இளமை ததும்பச் சொல்லும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை காரைக்குடி பகுதியை சுற்றி வந்து படம் பிடித்திருக்கிறார்கள்.
