முந்தானை சேலை நழுவ அழகான இளம்பெண் ஒருத்தி போஸ்டரில் உட்கார்ந்திருப்பாள் அல்லது படுத்திருப்பாள். சுண்டி இழுக்கும் இந்தப் போஸ்டரைப் பார்த்துவிட்டு ‘ஏதோ’ எதிர்பார்ப்பில் தியேட்டருக்குள் நுழையும் ரசிகனை தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிச்சு வெளியே அனுப்புவார்கள். சமீபகாலமாக தொடர்ந்து இது மாதிரியான படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடிக்கிறது. சுமாரான ஹீரோ. அவனுக்கு ஒரு அழகான மனைவி. திருமணம் முடிந்து 1 வருடம் ஆன போதிலும், மனைவியிடம் தாம்பத்ய [...]








