இதயம் படத்தின் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்தவர் நடிகர் முரளி. அவரது மகன் கதாநாயகனாக அறிமுகம் ஆன பாணா காத்தாடி படத்தில் ஒரு காட்சியில் வந்து அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிட்டுப் போனார். ஏராளமான படங்களில் கல்லூரி மாணவனாக நடித்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகர் முரளி இன்று அதிகாலை நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்தார். நெஞ்சு வலிப்பதாக கூறிய முரளியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணமடைந்தார். நடிகர் முரளியின் [...]








