தெரு நாய்கள் படத்திற்கு யு சான்றிதழ்

theru-naaigal-01

டெல்டா விவசாயக் கிராமங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசும் படமாக உருவாகியுள்ளது தெரு நாய்கள். இந்த திரைப்படத்தை ஹரி உத்ரா எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கபட்டுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

“விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு எனவே அதனைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” எனும் வள்ளலாரின் கருத்தை பேசும் படமாக “தெரு நாய்கள்” இருக்கும்…” என்கிறார் இயக்குனர் உத்ரா.

கதையின் நாயகனாகப் பிரதீக் , நாயகியாக அக்க்ஷதா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தைச் சுசில்குமார் தயாரித்துள்ளார். ஜூலை மாதம் தெரு நாய்கள் வெளியாக உள்ளது.