தி மம்மி 2017 விமர்சனம்
The-Mummy-2017
ஆக்‌ஷன் பட நாயகன் டாம் க்ரூஸ், ரஸ்ஸல் க்ரோவ் நடிப்பில் உருவாகியிருக்கிறது தி மம்மி 2017. எதிர்பார்ப்பை எகிற வைத்த தி மம்மி 3டி படம் எப்படித்தான் இருக்கிறது…?

இளவரசி அமனெட் தன் நாட்டுக்கு அரசியாக விரும்புகிறாள். இதற்காக தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்கிறாள். கடைசியாக தனது காதலரையும் கொன்று கடவுளுக்குப் பலி கொடுக்க முயற்சிக்கும் போது, உயிருடன் புதைக்கப்படுகிறாள். மெசபடோமியாவில் தற்போதைய ஈராக்கில் நிக் மார்ட்டன் (டாம் க்ரூஸ்) மற்றும் அவரது நண்பர் இருவரும் புதையலைத் தேடிக் கிளம்புகிறார்கள். புதையல் தேடிப் போனவர்களின் கண்களில் தென்படுகிறது இந்த மம்மியின் கல்லறை. மம்மி சிலையை ராணுவ ஹெலிகாப்டரில் கட்டி எடுத்துக்கொண்டு லண்டனுக்குக் கிளம்புகின்றனர். மம்மியை கையோடு எடுத்துக் கொண்டு போனால் என்னவாகும். அதைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள்தான் தி மம்தி படத்தின் அதிரடியான மீதி கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார் டாம் க்ரூஸ். ஆக்க்ஷனில் கலக்கியிருக்கிறார். டாம் க்ரூஸின் நடித்திருக்கிறார் ஜேக் ஜான்சன். மம்மியாக நடித்திருக்கிறார் சோபியா. புதைக்கும்போது எப்படி கட்டப்பட்ட துணியோடு இருந்தாரோ அப்படியேதான் படம் முழுக்க வருகிறார். டாக்டர் ஜெக்கில்லாக நடித்திருக்கும் ரஸ்ஸல் க்ரோவ், அவ்வப்போது வில்லன் கதாபாத்திரமான எட்வார்டு ஹைடாக மாறுகிறார்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் பிரைன் டிரைலர். ஒளிப்பதிவு பென் செரேசன். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தின் காட்சிகளில் திகிலுடன் ஒன்றிப் போகச் செய்கிறது. பால் ஹிர்ஷ், ஹினா ஹிர்ஷ், அன்ட்ரு என மூன்று பேர் இந்தப் படத்திற்கு படத் தொகுப்பு செய்திருக்கிறார்கள். படத்தை இயக்கியிருக்கிறார் அலெக்ஸ் குர்ட்ஸ்மன். திகிலும் விறுவிறுப்பும் கலந்த படமாக மம்மியை இயக்கியிருக்கிறார்.