சொல்லிவிடவா – அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் படம்

நடிகர் அர்ஜுன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் சொல்லிவிடவா. காதலின் பொன் வீதியில் எனத் தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் தலைப்பு தற்போது “சொல்லிவிடவா” என மாற்றப்பட்டுள்ளது.

காதல், நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடிய வகையில் “சொல்லிவிடவா” படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் அர்ஜூன். இந்தத் திரைப்படத்தில் இளமை துடுக்கான வேடத்தில் அர்ஜுன் மகள் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். நடிகர் சந்தன் முதன்முறையாகத் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

சொல்லிவிடவா படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.