சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணி மீண்டும் இணைகிறது

24-AM-STUDIOS-Production-No-4-launch-images-12

தமிழ் சினிமா ரசிகர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராமின் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தின் துவக்க விழா நடைபெற்றுள்ளது. தொடர்ந்து முப்பது நாட்கள் தென்காசி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. “இக்கதை களத்திற்கு தென்காசி சரியானது என் நாங்கள் எண்ணியதால் இந்த பகுதியை முடிவு செய்தோம். இந்தப் படத்தில் கதாநாயகனாக சமந்தா நடிக்க உள்ளார். சூரியும் சிவாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்க உள்ளார். ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படத்தை மக்கள் நிச்சயம் எதிர் பாக்கலாம். சிம்ரன் மற்றும் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்…” என்கிறார் தயாரிப்பாளர் ராஜா.