நல்ல விலைக்கு விற்பனையான சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் தெலுங்கு உரிமை

Server-Sundaram-01

சந்தானம் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் சர்வர் சுந்தரம். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சர்வர் சுந்தரம் படத்தின் தெலுங்கு உரிமத்தை லிங்க பைரவி கிரேஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

“எல்லா மொழி மக்களும் ரசிக்கும்படியான படம் சர்வர் சுந்தரம். அத்தியாவசிய தேவையான உணவையும் சமையலையும் பற்றிய கதை கொண்ட படம் என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கும். மிக பெரிய அளவில் வெளியாக இருக்கும் இந்த படம் சந்தானம்த்தின் வர்த்தக மதிப்பை இன்னும் உயர்த்தும்…” என்கிறார் படத்தைத் தயாரித்திருக்கும் செல்வகுமார்.