பண்டிகை – வித்யாசமான திரில்லர் கலந்த காதல் படம்

Pandigai-Movie-Poster

சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் பண்டிகை படத்தில் கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடித்துள்ளனர். பெரோஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை டீ டைம் டாக்கீஸ் தயாரித்துள்ளது. ஆரா சினிமாஸ் இந்தப் படத்தை வெளியிட உள்ளது.

”சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல் தான் பண்டிகை படத்தின் கதைக்களம். காதலிலும் சண்டைக் காட்சிகளிலும் சரியான அளவில் பயணிக்கும் பண்டிகை இருக்கும். படத்தை எங்கள் குழுவினர் அனைவரும் பார்த்துவிட்டார்கள். சிறப்பாக வந்துள்ளது படம் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆரா சினிமாஸ் எங்கள் படத்தை வாங்கி வெளியிடுவது எங்கள் படத்திற்கு கிடைத்த நற்சான்று. பண்டிகை மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட்டதுடன் ரசிக்க வேண்டிய படமாக இருக்கும்…” என்கிறார் படத்தின் இயக்குனர் பெரோஸ்.