தமிழில் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்

வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். கேனன்யா ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பயணம் சார்ந்த பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக்.

படம் பற்றி அறிமுக இயக்குனர் கார்த்திக், “வழக்கமான கிளிஷே காட்சிகள் இல்லாத பயணம் சார்ந்த படமாக இந்தப் படம் இருக்கும். படத்தில் மொத்தம் நான்கு நாயகிகள் நடிக்கின்றனர். துல்கருக்கு கதையும், திரைக்கதையும் ரொம்பவே பிடித்துப் போய் விட்டது. தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம்…” என்கிறார்.