
சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள சுந்தரபாண்டியன் படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கொண்டாடும் மனசு பாடலை எழுதியிருக்கிறார் மோகன்ராஜன். இவர் ஏற்கனவே ஈசன் படத்தில் ஜில்லா விட்டு பாடலை எழுதியவர். கொண்டாடும் மனசு பாடல் ஹீரோ அறிமுக பாடலாக எழுதப்பட்டுள்ளது.
ரெக்கை முளைத்தேன் பாடலை ஜீவி பிரகாஷ் உடன் ஸ்ரேயா கவுசலும் இணைந்து பாடியிருக்கிறார்கள். மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடல் ஒரு டூயட் பாடலாக இருக்கிறது. ஸ்ரேயா கௌசலின் குரலில் தேனாக தித்திக்கிறது ரெக்கை முளைத்தேன்.
நெஞ்சுக்குளே என்று தொடங்கும் பாடலை சைந்தவி பாடியிருக்கிறார். தாமரை இந்த பாடலை எழுதியிருக்கிறார். ஒரு பெண்ணின் ஆசைகளை ஏக்கங்களை பதிவு செய்கிறது நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ளே பாடல். பாடலின் ஒரு வரி முடிந்ததும் இடைவெளி விடாமலே அடுத்த வரியும் தொடர்ந்து வருவது பாடலின் ஹைலைட்.
காதல் வந்து பொய்யாக உன்னைச் சுற்றினாலே… பாடலை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். பாடியிருக்கிறார் ஹரிச்சரண். காதல் வரும் போது ஏற்படும் அனுபவங்களை பதிவு செய்கிறது இந்த பாடல்.
சுந்தரபாண்டியன் பாடல்களைக் கேட்க




